சட்டவிரோதமாக செயல்பட்ட பெண்கள் விடுதி..! மாயமான 26 சிறுமிகள்..!

மத்திய பிரதேச மாநிலம், போபாலின் புறநகர் பகுதியான பர்வாலியா-வில் ‘ஆன்சல்’ என்ற பெண்கள் விடுதி உள்ளது. இங்கு தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய (என்.சி.பி.சி.ஆர்) தலைவர் பிரியங்க் கனுங்கோ, திடீர் ஆய்வுக்கு சென்றுள்ளாா். அப்போது, அங்குள்ள பதிவேட்டை சரிபார்த்தபோது, மொத்தம் உள்ள 68 சிறுமிகளில் 26 பேர் காணாமல்போனது தெரியவந்தது.

இதில் காணாமல்போன சிறுமிகள் குஜராத், ஜார்க்கண்ட், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். இந்நிலையில், இது குறித்து விடுதி இயக்குநர் அனில் மேத்யூவிடம் விசாரணை நடத்தப்பட்டது. ஆனால் அவர் உரிய முறையில் பதிலளிக்கவில்லை. இதனால் ,உள்ளூா் போலீசிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்படி, போலீஸார் நடத்திய விசாரணையில், சட்டவிரோதமாக நடத்தப்பட்டு வந்த இந்த பெண்கள் விடுதியில் பல முறைகேடுகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த விடுதியில் 6 முதல் 18 வயதுக்குள்பட்ட சிறுமிகள் வசித்து வந்ததாகவும், இந்து மதத்தை சேர்ந்த அவர்கள், கிறிஸ்துவத்தை பின்பற்றும்படி கட்டாயப்படுத்தப்பட்டதாகவும் என்.சி.பி.சி.ஆர் தலைவர் பிரியங்க் கனுங்கோ குற்றம் சாட்டியுள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீஸார் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News