தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அடுத்துள்ள வடக்கு அழகு நாச்சியார்புரத்தை சேர்ந்தவர் மகாகிருஷ்ணன் (40). இவர் வேன் ஓட்டுநராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி கனகாதேவி(32). இவர்களுக்கு 2 இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.
மகாகிருஷ்ணனுக்கும் அதே பகுதியே சேர்ந்த திருமணமான பெண் ஒருவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இதை அறிந்த கனாதேவி கணவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால், இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில், இந்த தம்பதிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த மகாகிருஷ்ணன் தனது மனைவியை அரிவாளால் கொடூரமாக வெட்டி கொலை செய்துவிட்டு முகத்தையும் அடையாளம் தெரியாதபடி சிதைத்து பிச்சிப்பூ தோட்டத்தில் உடலை வீசிவிட்டு தலைமறைவானார்.
இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் கனகாதேவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை செய்து விட்டு தலைமறைவாக இருந்த மகாகிருஷ்ணணை போலீசார் கைது செய்தனர்.