லண்டனில் பரபரப்பாக காணப்படும் சோஹோ பகுதியில் பொது இடங்களில் சிறுநீர் கழிக்கும் பழக்கம் அதிகரித்து வருவதாக புகார் குவிந்தது.

இதற்கு முடிவு கட்டும் விதமாக சுவரில் சிறுநீர் கழித்தால் கழிப்பவர் மீதே திருப்பி அடிக்கும் வகையிலான பெயிண்ட் அடிக்கப்பட்டுள்ளது. இந்த பெயிண்டை சோஹோவில் உள்ள முக்கியமான 10 இடங்களில் உள்ள சுவர்களில் பூசப்பட்டுள்ளது.