3900 ஊழியர்களை அதிரடியாக நீக்கிய பிரபல நிறுவனம்…சோகத்தில் பணியாளர்கள்!

Spotify, Wipro, Microsoft, Google, Amazon மற்றும் Dunzo உள்ளிட்ட பல நிறுவனங்கள், கடந்த இரண்டு ஆண்டுகளாக அதிகப்படியான பணிநீக்கங்களை அறிவித்துள்ளன. இந்த வரிசையில் அமெரிக்காவின் பிரபல சர்வதேச வணிக இயந்திரங்கள் கழகம் IBM ஆனது அதன் பண இலக்குகளை அடையத் தவறியதால் 3900 பணியாளர்களை நீக்கும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டில் நிறுவனத்தின் பணப்புழக்கம் 9.3 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. இதையடுத்து 10 பில்லியன் டாலர்களாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் அவர்கள் திட்டமிட்டிருந்த இலக்கை விட குறைவாக இருந்தது.

IBM வர்த்தகத்தில் நிறுவனத்தின் பங்குகள் கடந்த சில மாதங்களில் 2% வரை சரிந்தன. இதனால் நிறுவனத்தின் மொத்த மதிப்பு சரிவை சந்தித்துள்ளது. இதை சரிசெய்வதற்காக தற்போது 3900 பணியாளர்களை நீக்கியுள்ளதாக அறிவித்துள்ளது.

RELATED ARTICLES

Recent News