உயிர் பிழைக்க எனது சிறுநீரையே குடித்தேன். நிலநடுக்கத்தில் சிக்கிய இளைஞர் கண்ணீர் பேட்டி

துருக்கி-சிரியா எல்லையில் பிப்ரவரி 6ஆம் தேதி நிகழ்ந்த மோசமான நிலநடுக்கத்தின் பலி எண்ணிக்கை 25,000ஐ தாண்டியுள்ளன. துருக்கியில் ஏற்பட்ட கோர நிலநடுக்கத்தின் மீட்பு பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

காசியன்டெப் பகுதியில் 17 வயது இளைஞர் ஒருவர் 94 மணிநேரத்திற்குப் பின் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். இடிபாடுகளில் சிக்கிக்கொண்ட இந்த இளைஞர் பேசிய நெகிழ்ச்சியான வார்த்தைகள் தான் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

“இவ்வளவு நேரம் உங்களுக்காகத் தான் காத்திருந்தேன். யாராவது வருவார்களா என பார்த்துக்கொண்டே இருந்தேன். நான் உயிரோடு இருக்க வேண்டும் என்பதற்காக எனது சிறுநீரையே குடித்து உயிரை காத்து வந்தேன். நல்ல வேளை, கடவுளுக்கு நன்றி. உங்கள் அனைவருக்கும் நன்றி” இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. வீடியோவை பார்த்து பலரும் அந்த இளைஞரின் போராட்ட குணத்தை பாராட்டி வாழ்த்து தெரிவித்து கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News