பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஹிரித்திக் ரோஷன். இவரும், சூசன் என்பவரும் காதலித்து திருமணம் செய்துக் கொண்ட நிலையில், கடந்த 2013-ஆம் ஆண்டு அன்று, இருவரும் விவாகரத்து செய்துக் கொண்டனர்.
பொதுவாக விவாகரத்து செய்த பிறகு, கணவன்-மனைவி இருவரும் ஒன்றாக சந்திப்பதும், பேசுவதும் நடப்பது அரிதான ஒன்றாக தான் பார்க்கப்படுகிறது.
ஆனால், ஹிரித்திக் ரோஷனும், அவரது மனைவியும், விவாகரத்திற்கு பிறகும், நல்ல நட்புடன் இருந்து வருகின்றனர். கொரோனா சமயத்தில், குழந்தைகள் தன்னை காணாமல் வருத்தப்படுவார்கள் என்று நினைத்த ஹிரித்திக் ரோஷன், குழந்தைகளையும், சூசனையும் வீட்டிற்கு அழைத்து தங்க வைத்தார்.
இதற்கு சூசனும் மறுப்பு எதுவும் சொல்லாமல், ஹிரித்திக் ரோஷனின் அன்பிற்கு மதிப்பு கொடுத்தார். இவ்வாறு விவகாரத்திற்கு பிறகும் இருவரும் நட்புடன் பழகி வருகின்றனர்.
இவர்களது நாகரீகமான வாழ்க்கைக்கு எடுத்துக்காட்டாக இன்னொரு சம்பவம் நடந்துள்ளது. அதாவது, ஹிரித்திக் ரோஷன், தன்னுடைய முன்னாள் மனைவி சூசன் மற்றும் அவரது தற்போதைய காதலன் ஆகியோருடன், டின்னர் சாப்பிட சென்றுள்ளார்.
இதுதொடர்பான வீடியோ வெளியாகி, வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், “மிகவும் நாகரீகமான உறவாக இது உள்ளது. இருவரும் ஒருவருக்கு ஒருவர் நல்ல மதிப்பு கொடுக்கிறார்கள்” என்று கூறி வருகின்றனர்.
ஒரு சிலர், “இவ்வளவு மரியாதையுடன் நடந்துக் கொள்ளும் இவர்கள் எதற்கு விவாகரத்து செய்து பிரிந்தார்கள்.. ஒன்றாகவே இருந்திருக்கலாமே” என்றும் தங்களது கருத்துக்களை கூறி வருகின்றனர்.