இன்றைய நவீன உலகத்தில் அனைவரின் கைகளிலும் ஸ்மார்ட்போன் இருக்கிறது. ஸ்மார்ட்போன் இன்று அவசிய பொருளாக மாறிவிட்டது. இப்படிப்பட்ட சூழலில் மொபைல் தொலைந்து விட்டால் அதனால் ஏற்படும் பாதிப்பை சொல்லி தெரிய வேண்டியதில்லை.
நீங்கள் ரயிலில் பயணம் செய்யும்போது உங்களுடைய மொபைல் தவறி வெளியே விழுந்து விட்டால் பதட்டம் அடையாமல் உடனே ஜன்னல் வழியே எட்டி பாருங்கள். அப்போது தெரியும் மின் கம்பத்தில் எழுதப்பட்டிருக்கும் எண்ணை மட்டும் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் Train tracking app மூலமாக உங்கள் லோக்கேஷனை குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.

அதன் பிறகு 183 அல்லது 139 என்ற எண்ணை தொடர்புகொண்டு நீங்கள் ஏற்கனவே குறித்து வைத்திருந்த மின் கம்பத்தின் நம்பர் மற்றும் உங்கள் விவரங்களை கூற வேண்டும். இப்படி நீங்கள் செய்தால் அடுத்த சில நிமிடங்களிலேயே ரயில்வே போலீஸார் நீங்கள் கூறிய இடத்துக்கு சென்று உங்கள் செல்போனை கண்டுபிடித்து கொடுத்து விடுவார்கள்.