சென்னை ஈஞ்சம்பாக்கம் பகுதியில் கடை திறப்பு விழா ஒன்று நடைபெற்றது. இந்த விழாவில் பிரபல நடிகர் ரவி மோகன் கலந்துக் கொண்டார். இந்த விழாவைத் தொடர்ந்து, அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவரது இளமையின் ரகசியம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது.
இதற்கு பதில் அளித்த ரவி மோகன், “அதிகமாக தண்ணீர் குடியுங்கள். அது நம் உடலை, நீரிழப்பு ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும். நான் காலையில் எழுந்ததும் 1 லிட்டர் தண்ணீர் குடிப்பேன். இதேபோல், இரவிலும் தண்ணீர் குடிப்பேன். இதுதான் என் இளமையின் ரகசியமா என்பது எனக்கு தெரியாது.
ஆனால், இதைத்தான் நான் செய்கிறேன்” என்று கூறினார். நடிகர் ஜெயம் ரவி, தற்போது பராசக்தி, கராத்தே பாபு ஆகிய இரண்டு படங்களில் நடித்து வருகிறார். இதில், பராசக்தி படத்தில் அவர் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.