இல்லத்தரசிகள் மகிழ்ச்சி: தக்காளியின் விலை குறைவு!

சென்னையில் தக்காளியின் விலை கடந்த சில நாட்களாக திடீரென உயர்ந்தது. இதற்கான காரணம் தென் மாவட்டங்களில் மழை அதிகமாக இருந்ததாலும், அண்டை மாநிலங்களான ஆந்திரா கர்நாடகாவில் இருந்து வரதுக்கு குறைந்ததாலும் விலை 80 ரூபாயிலிருந்து 100 ரூபாய் வரை தக்காளி நேற்று விற்பனையானது.

வழக்கமாக நாள் ஒன்றுக்கு 30 லாரிகள் வந்தாலே போதுமான தக்காளி தேவை இருக்கும் விலையும் குறைவாக இருந்தது.

இந்த நிலையில் 20 லாரிகளுக்கும் குறைவாக இருந்தால் விலை உயர்வுக்கு காரணமாக இருந்து. இதைத்தொடர்ந்து இன்றைய தினத்தில், 40 க்கும் மேற்பட்ட லாரிகளில் 100 டன் தக்காளிகள் ஆந்திர மாநிலத்தில் இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக, (ஜூலை 17) நேற்று விட 20 ரூபாய் குறைந்து 1 கிலோ தக்காளி விலை 60 ரூபாய்க்கு குறைந்துள்ளது.

பண்ணை பசுமை கடையில் குறைந்த விலைக்கு தக்காளியின் விலை விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

சென்னை தேனாம்பேட்டை உள்ள பண்ணை பசுமை நுகர் கடையில் நேற்று ஒரு கிலோ தக்காளி விலை 65 ரூபாய் விற்பனை செய்யப்பட்டது இன்று கிலோவிற்கு 40 விற்பனை செய்யப்படுகிறது

மேலும் பல நாட்களில் படிப்படியாக விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

RELATED ARTICLES

Recent News