சமீப காலமாக உலகம் முழுவதும் பல்வேறு நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகிறது. இதில் குறிப்பாக தொழில்நுட்ப துறை ஊழியர்களே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இப்படிப்பட்ட சூழலில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த புகழ்பெற்ற ஹெர்மீஸ் (Hermes) நிறுவனம் அங்கு பணிபுரியும் சுமார் 20,000 ஊழியர்களுக்கு தலா 3.5 லட்சம் ரூபாய் போனஸ் தொகை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.
பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பழமையான நிறுவமான ஹெர்மீஸ் 1837ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனம் வீட்டு அலங்கார பொருட்கள், லெதர் பொருட்கள், வாட்ச், ஆடைகள் என பல்வேறு ஆடம்பர பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது.

இந்நிலையில் அனைத்து ஊழியர்களுக்கும் தலா 4000 யூரோ போனஸ் தொகையாக வழங்கப்படும் என அறிவித்துள்ளது. 4000 யூரோ என்பது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 3,52,000 ரூபாய் ஆகும்.
கடந்த ஆண்டில் ஹெர்மீஸ் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு சம்பளத்தை 6% உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.