சென்னை அம்பத்தூரின் அனைத்து பிரதான சாலைகளில் உள்ள அனைத்து சிக்கனல்களிலும் பொதுமக்கள் 60 வினாடிகள் வரை காத்திருந்து செல்ல வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள்., பள்ளி செல்லும் மாணவர்கள்., வேலைக்கு செல்பவர்கள் என பலரும் இன்னலுக்கு ஆளாக்கப்பட்டு இருப்பதாக வேதனை தெரிவித்தனர்.
இதனிடையே அம்பத்தூர் போக்குவரத்து போலீசார் சிக்னல் முறையை தடை செய்துவிட்டு., மாற்று வழி முறையை அறிமுகம் செய்துள்ளது. இதனால் அம்பத்தூரில் இருந்து அம்பத்தூர் ஓட்டி இடையிலான ரயில்வே மேம்பாலத்தில் ஒரே நேரத்தில் பயணிகள் அனைவரும் கடக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது
இந்நிலையில் அம்பத்தூர் எம்.டி.ஹெச் சாலையில் ஏற்பட்ட கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
காலையில் எட்டு மணிக்கு தொடங்கிய போக்குவரத்து நெரிசல் தற்போது வரை குறையாததால் வாகன ஓட்டிகள் வெயிலில் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.