அம்பத்தூர் எம்டிஹெச் சாலையில் போக்குவரத்து சிக்னலுக்கு பதிலாக U turn முறையை பயன்படுத்தியதால் இரண்டு கிலோ மீட்டருக்கும் மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
சென்னை அம்பத்தூரின் அனைத்து பிரதான சாலைகளின் சந்திப்பிலும் சிக்னல் முறையில் பொதுமக்கள் 20 நாட்களில் இருந்து 60 வினாடிகள் வரை காத்திருந்து பின்பு செல்ல வேண்டிய சூழல் இருந்தது.
இந்த நிலையில் அம்பத்தூர் போக்குவரத்து போலீசார் சிக்னல் முறையை தடை செய்துவிட்டு U turn முறையை அறிமுகம் செய்தனர். இதனால் அம்பத்தூரில் இருந்து அம்பத்தூர் ஓட்டி ரயில்வே மேம்பாலத்தில் ஒரே நேரத்தில் பயணிகள் அனைவரும் இதை கடக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.
இதன் காரணமாக அந்த பாலத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது . கொரட்டூரில் இருந்து கள்ளிகுப்பம் செல்வதற்கு சாலையிலும் பள்ளம் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும் எம்டிஹெச் சாலை வழியாக செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது.
இதனால் அதிகமான வாகனங்கள் அங்கு குவிந்து இரண்டு கிலோமீட்டருக்கு மேல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. காலையில் எட்டு மணிக்கு தொடங்கிய போக்குவரத்து நெரிசல் தற்போது வரை குறையாததால் வாகன ஓட்டிகள் வெயிலில் கடும் அவதி அடைந்துள்ளனர்.