பணியில் ஈடுபடும்பொழுது மாரடைப்பு ! உயிரிழந்த சிபிஐ அதிகாரி !

கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் வாணியர் தெருவை பகுதியை சேர்ந்தவர் ராஜசேகரன் இவர் கடந்த 22 ஆண்டுகளுக்கு முன்பு எல்லை பாதுகாப்பு படையில் பணியில் சேர்ந்தார்.

இதனை தொடர்ந்து கடந்த 2019 மத்திய அரசால் சிபிஐ துறையில் பணி நியமனம் செய்யப்பட்டு மதுரை ஆத்திகுளம் பகுதியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் அதிகாரியாக பணிபுரிந்து வந்தார்.
மேலும் ,ராஜசேகருக்கு 54 முறை சிபிஐயால் கௌரவப்படுத்தப்பட்டு பரிசுகள் அளிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் சிபிஐ அதிகாரி ராஜசேகரன் கடந்த 5ஆம் தேதி மதுரை சிபிஐ அலுவலகத்தில் பணியில் ஈடுபட்டுகொண்டிருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.இதனையடுத்து அவரது உடலானது சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டது ,21 குண்டுகள் முழங்க மரியாதை அளிக்கப்பட்டது.

உயிரிழந்த ராஜசேகரனின் உருவப்படத்திற்கு மதுரை ஆத்திகுளம் பகுதியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் மற்றும் அலுவலக ஊழியர்கள் மலர்தூவி,மௌன அஞ்சலி செலுத்தினர்.

RELATED ARTICLES

Recent News