சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கொளத்தூர் கருங்கல்லூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 144 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் ராஜா என்பவர் இவர் பள்ளியில் 5-ம் வகுப்பு படிக்கு மாணவிகளை தனது அறைக்கு அழைத்து தினமும் கை, கால்களை அமுக்கிவிட்டு தலையை மசாஜ் செய்து விடுமாறு வற்புறுத்தி உள்ளார்.
இதை அறிந்த மாணவிகளின் பெற்றோர் பள்ளி தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளியை முற்றுகையிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து கொளத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
தலைமை ஆசிரியர் ராஜாவை மேட்டூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். பின்னர் தலைமை ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.