தென்காசி மாவட்டம் குற்றாலம் பேருந்து நிலையம் அருகே இருசக்கர வாகனத்தில் அபாயகரமான முறையிலும் பொதுமக்களை அச்சுறுத்தும் விதமான தலைக்கவசத்தை அணிந்து கொண்டு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் சுற்றி வந்துள்ளார். இவர் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக வலைதளங்களில் வீடியோ வைரலாக பரவி வந்துள்ளது.
இது குறித்து குற்றாலம் காவல்துறையினர் அப்பகுதி CCTV கேமராக்களை சோதனை செய்ததில் அது தென்காசி மலையான் தெருவை சேர்ந்த சுரேஷ் என்பவரின் மகன் சுஜித் (23) என தெரியவந்தது.
சுஜித் விலங்கின் உருவம் போன்ற தலைகவசத்தை அணிந்து கொண்டு குற்றாலத்தில் மக்களுக்கு அச்சத்தை எற்படுத்தும் விதமாக வலம் வந்துள்ளார். இது குறித்து சுஜித் மீது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து ரூபாய் 10,000 அபராதம் விதித்து மேற்படி இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.