குருகிராமை சேர்ந்த ஆய்வு நிறுவனத்தின் பேராசிரியர் ராஜேஷ் பிலனியா தலைமையில் இந்தியாவில் மிகவும் மகிழ்ச்சியான மாநிலம் எது என்பது குறித்த ஆய்வு நடத்தப்பட்டது.

குடும்பம், வேலை சார்ந்த பிரச்சனைகள், உடல் நலம், மன நலம் போன்ற காரணிகளின் அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
இந்த ஆய்வின் முடிவில் இந்தியாவிலேயே மகிழ்ச்சியான மாநிலமாக மிசோரம் உள்ளது. மேலும் எழுத்தறிவு 100 சதவிகிதம் அடைந்துள்ள 2-வது மாநிலம் மிசோரம் என்றும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.