நடிகை ஹன்சிகாவின் திருமணம் கடந்த ஆண்டு டிசம்பர் 4-ஆம் தேதி அன்று நடைபெற்றது. அவரது நீண்ட நாள் நண்பரையே கரம் பிடித்த ஹன்சிகா, திருமணத்திற்கும் பின்னரும் பிசியாக நடித்து வருகிறார்.
தற்போது ஹன்சிகா திருமணத்தின் ப்ரோமோ வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. அதில், அவரது முன்னாள் காதலர் சிம்புவை நினைத்து கண்கலங்கி பேசி இருப்பது வைரலாகி வருகிறது.

அதாவது நான் காதலித்தது அனைவருக்கும் தெரியும். அது போன்று மீண்டும் நடக்க கூடாது என நினைக்கிறேன் என்றார். மேலும் அதை வெளிப்படையாக அறிவிப்பது என்றால், அவரை நான் திருமணம் செய்துகொள்பவாராக இருக்க வேண்டும் என்று பேசியுள்ளார்.
தற்போது என் நெருங்கிய நண்பரை தான் திருமணம் செய்துள்ளேன். அவர், எல்லா நேரத்திலும் என்னுடன் இருந்திருக்கிறார் என்றும் தெரிவித்துள்ளார்.