மத்திய அரசின் ஜி.எஸ்.டி வரியில் வீட்டு உபயோகப் பொருட்கள், மற்றும் சாமானிய மக்களுக்காக வழங்கப்பட்டு வரும் அனைத்தும் பொருட்களின் விலையில் இருந்து 5% வரி குறைக்கப்பட்டுள்ளன.
டெல்லியில் நேற்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 56-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. அதில் அனைத்து மாநிலங்களை சார்ந்த நிதி அமைச்சர்களும் கலந்து கொண்டனர்.
இதில் ஜி.எஸ்.டி வரிக்குறைப்பு., உள்ளிட்ட முக்கிய சீர் திருத்தங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஹேர் ஆயில், ஷாம்பு, பற்பசை மற்றும் பல் ஃப்ளாஸ் போன்ற பொருட்களுக்கு இதற்கு முன் 18 சதவீதம் ஜி.எஸ்.டி விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
இதேபோல் குழந்தைகளுக்கான பால் புட்டி, நாப்கின், மருத்துவ டயப்பர்களுக்கு 12 சதவீதத்தில் இருந்து 5% ஆகவும், வெண்ணெய், நெய், பால் பொருள்கள் மீதான ஜிஎஸ்டி வரிவிதிப்பு 12%லிருந்து 5% ஆகவும், நொறுக்குதீனிகளுக்கான வரி 12% இருந்து 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது.
மற்றும் தையல் இயந்திரம், உதிரி பாகங்கள் போன்றவற்றிற்கு ஜிஎஸ்டி வரி 12%, 5% ஆகவும் ஆட்டோ, இருசக்கர வாகனங்கள், சரக்கு வாகனங்கள், வீடுகளில் பயன்படுத்தப்படும் ஏசி, டிவி மற்றும் கார் போன்றவற்றிக்கு 28 சதவீதமாக இருந்த வரி தற்போது 18 சதவீதமாகவும், குறைக்கப்பட்டுள்ளது.
மேலும் மருத்துவத்துறையில், தெர்மோமீட்டர், மருத்துவ ஆக்ஸிஜன், பரிசோதனைப் பொருள்கள், கண்ணாடி மீதான ஜிஎஸ்டி 12 சதவீதத்திலிருந்து 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது.