மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு கருணாநிதிக்கு மெரினா கடற்கரை அருகே 81 கோடி ரூபாயில் பிரமாண்ட சிலை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கு அதிமுக, நாம் தமிழர் கட்சி, பாஜக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.
இந்நிலையில் கலைஞர் கருணாநிதிக்கு கடலில் பேனா சின்னம் அமைக்கும் முடிவை தமிழக அரசு திரும்ப பெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கு பதிலாக மெரினாவில் அமைய உள்ள நினைவிடத்தின் அருகில் சிறிய அளவில் சின்னத்தை வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.