கோவை அரசு மருத்துவமனையில் வீல் சேர் இல்லாததால் நோயாளி தந்தையை மகன் இழுத்துச் சென்ற சம்பவம் தொடர்பாக 2பேர் பணியிட நீக்கம்…
கோவை அரசு மருத்துவமனையில் வீல் சேர், ஸ்ட்ரெக்சர் வழங்காமல் காக்க வைத்ததால் சிகிச்சைக்கு வந்த தந்தையை மகனே தூக்க முடியாமல் இழுத்து சென்ற அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்தது. இந்த சம்பவம் தொடர்பாக செய்திகள் வெளியான நிலையில் அரசு மருத்துவமனை முதல்வர் கீதாஞ்சலி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், போதுமானதாக வீல் ஸ்ட்ரெக்சர் உள்ளது. இருந்த போதிலும் கூடுதலாக உபகரணங்கள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளதாக கூறினார். குறிப்பாக வெளி நோயாளிகள் பிரிவில் 6 வீல் சேர், 10 ஸ்ட்ரெக்சர் இருப்பதாக தெரிவித்த முதல்வர் கீதாஞ்சலி, நோயாளிகள் சிலர் விரைவாக செல்ல விரும்புவதால் கூடுதல் வீல் சேர் மற்றும் ஸ்ட்ரெக்சர் வாங்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
நோயாளியை வீல்சேரில் கொண்டு செல்வதற்கு பணம் கேட்பதாக சிலர் புகார்கள் எழுந்து வருவதால்., மருத்துவமனை ஊழியர்கள் தேர்வு தனியார் நிறுவனம் கிறிஷ்டல் சார்பில் இதுகுறித்த நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டு வருவதாக தெரிவித்தார். அவர்களை கட்டுபடுத்த முடியவில்லை எனவும் வேதனை தெரிவித்தார்.
இருந்த போதிலும் நோயாளி பாதிக்கபட்ட விவகாரத்தில் கிறிஸ்டல் நிறுவனமேலாளர்கள் எஸ்தர்
ராணி மற்றும் மணி வாசகம் ஆகியோரை ஐந்து நாட்கள் பணியிடை நீக்கம் செய்துள்ளதாகவும் அவர் விளக்கம் அளித்தார்..