அரசு போக்குவரத்து கழகத்தின் கீழுள்ள ஏராளமான பேருந்துகள் காலாவதியான நிலையில் மோசமான நிலையில் இயக்கப்பட்டு வருவதாக புகார்கள் தொடர்ந்து வந்து கொண்டுதான் இருக்கின்றன.
இந்நிலையில் மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து டி.கல்லுப்பட்டி பகுதிக்கு இயக்கக்கூடிய அரசு பேருந்து முழுமையாக சேதமடைந்துள்ளது. இதனால் அதில் பயணிக்கும் பயணிகள் கடும் அச்சத்தோடு சென்று வரக்கூடிய சூழல் உருவாகியுள்ளது. பேருந்தில் தகரம் கழன்று விழுந்த நிலையில் அதனை கயிறுகளை கட்டி அந்த பேருந்து இயக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.
மதுரை மண்டல போக்குவரத்துதுறை கீழ் செயல்படும் ஏராளமான புறநகர் பகுதிகளுக்கு செல்லக்கூடிய அரசு பேருந்துகள் இதுபோன்று ஆபத்தான நிலையில் செயல்பட்டு வருவதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.
