உயிர் பலி வாங்கிய கூகுள் மேப் ! சடலமாக மீட்கப்பட்ட மருத்துவர்கள்!

கேரளா மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்த டாக்டர் அத்வைது மற்றும் டாக்டர் அஜ்மல் அவரது நண்பர்கள் மூன்று பேர் என ஐந்து பேர் காரில் கொச்சியில் உள்ள நண்பரின் இல்ல விழாவில் கலந்து கொண்டு விட்டு எர்ணாகுளத்துக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்

அப்போது எர்ணாகுளம் பகுதியில் பலத்த கனமழை காரணமாக சாலை சரியாக தெரியாத நிலையில் கூகுள் மேப்பை பயன்படுத்தி அதன் மூலம் வாகனத்தை இயக்கியுள்ளனர். இந்த நிலையில் கொச்சி அருகே உள்ள கொடூங்காடு என்ற பகுதியில் கார் வந்து கொண்டிருந்தபோது வழி தெரியாமல் அந்தப் பகுதியில் உள்ள ஆற்றில் கார் கவிழ்ந்ததக்க தெரிகிறது.

ஆற்று நீர் அதிகமாக சென்றிருந்த நிலையில் கார் ஆற்றோடு அடித்துச் செல்லப்பட்டது. இதனைக் கண்ட இந்த பகுதி மக்கள் உடனடியாக காரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர் . மேலும் தீயணைப்புத் துறையினருக்கு இது குறித்து தகவல் அளித்தனர்

விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் காரில் பின்பகுதியில் இருந்த மூன்று பேரை கார் கதவு திறந்து இருந்ததால் அவர்களை பத்திரமாக மீட்டனர். முன்பகுதியில் கார் கதவு முழுமையாக மூடி இருந்ததால் முன் வரிசையில் அமர்ந்து இருந்த டாக்டர் அத்வைது மற்றும் டாக்டர் அஜ்மல் ஆகிய இருவரும் சடலமாக மீட்கப்பட்டனர். காயமடைந்த மூன்று பேரும் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்

கேரளாவில் கூகுள் மேப்பை நம்பி வாகனத்தை இயக்கியவர்கள் தொடர்ந்து விபத்துக்குள்ளாகி வரும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் , கூகுள் மேப் பயனாளிகள் அனைவரும் பீதியில் உள்ளனர்.

RELATED ARTICLES

Recent News