அஜித் நடிப்பில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் குட் பேட் அக்லி. வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி அன்று இந்த திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. இதற்கிடையே, இந்த திரைப்படத்தின் டீசர், சமீபத்தில் ரிலீஸ் ஆனது.
இந்த டீசரை பார்த்த ரசிகர்கள், தங்களது உற்சாகத்தை கமெண்ட்ஸ் பக்கத்தில், வெளிப்படுத்தியிருந்தனர்.
இந்நிலையில், குட் பேட் அக்லி படத்தின் டிரைலர் ரிலீஸ் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த மாத இறுதியில், இப்படத்தின் டிரைலர் ரிலீஸ் ஆகும் என்று கூறப்படுகிறது. இந்த தகவல், அஜித்தின் ரசிகர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.