மீட்டிங் என வரச்சொல்லி 3000 பேரை வேலையை விட்டு தூக்கிய நிறுவனம்

அதிகாலையில் மீட்டிங் என ஊழியர்களை வரவழைத்து திடீரென ஊழியர்களை பணி நீக்கம் செய்த கோல்ட்மேன் சாச் நிறுவனத்திற்கு கண்டனம் குவிந்து வருகிறது.

அதிகாலை ஏழு முப்பது மணிக்கு மீட்டிங் வர வேண்டும் என 3000 ஊழியர்களுக்கு கோல்ட்மேன் சாச் நிறுவனம் அழைப்பு விடுத்திருந்தது.

மீட்டிங்கில் 3000 ஊழியர்களும் கலந்து கொண்ட நிலையில் திடீரென அவர்கள் அனைவரும் வேலை நீக்கம் செய்யப்படுவதாக அறிவித்தனர். எங்களுக்கு வேறு வழியில்லை என்றும் அதனால் அனைவரும் எங்களை மன்னித்து விடுங்கள் என்றும்கூறியுள்ளனர்.

இதையடுத்து கோல்ட்மேன் சாச் நிறுவனத்திற்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது.

RELATED ARTICLES

Recent News