தங்கத்தின் இன்றைய விலை நிலவரம் குறித்து, தற்போது தெரியவந்துள்ளது. அதன்படி, நேற்று 8 ஆயிரத்து 855 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிராம் தங்கம், இன்று 50 ரூபாய் குறைந்து, 8 ஆயிரத்து 805 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், நேற்று 70 ஆயிரத்து 840 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு சவரன் தங்கம், இன்று 400 ரூபாய் குறைந்து, 70 ஆயிரத்து 440 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கத்தின் அடிப்படையில், இந்த விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.