நாட்றம்பள்ளி அருகே காதல் திருமணம் செய்து கொண்ட நிலையில் காதலிக்கு 10 மாத குழந்தை ! காதலன் இரண்டாவது திருமணம் செய்ய இருந்த நிலையில் காதலி காதலன் வீட்டின் முன்பு தர்ணா ! ஆபாச வார்த்தைகளால் அர்ச்சனை செய்து கடும் அலப்பறையில் ஈடுபட்ட காதலன் குடும்பத்தார்
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த கே.பந்தரப்பள்ளி பகுதியைச் சேர்ந்த பச்சையப்பன் மகன் காளிமுத்து (23) இவரும் ஆலங்காயம் வள்ளிப்பட்டு பகுதியை சேர்ந்த சுப்பிரமணி மகள் சூரிய பிரியா(20) ஆகிய இருவரும் வாணியம்பாடி பகுதியில் உள்ள இஸ்லாமிய ஆண்கள் மற்றும் பெண்கள் கல்லூரியில் பயின்று வந்தனர்.
அப்போது கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு இருவரும் வீட்டை விட்டு வெளியேறி காதல் திருமணம் செய்து கொண்டனர் இந்த நிலையில் தற்போது பத்து மாதத்தில் ஆண் குழந்தை இருந்து வரும் நிலையில் கடந்த ஒன்றரை வருடத்திற்கு முன்பு அம்மா வீட்டிற்கு சென்று வருவதாக கூறி காளியப்பன் தனது அம்மா வீட்டிற்கு வந்த நிலையில் 50 பவுன் நகை கொண்டு வந்தால்தான் நம் இருவரும் சேர்ந்து வாழ முடியும் மேலும் மாற்று சமூகத்தினர் என்ற காரணத்தால் எனது அம்மா உன்னுடன் வாழக்கூடாது என்று கூறுகிறார்.
மேலும் தனக்கு இரண்டாவது திருமணம் செய்து வைப்பதாக காளியப்பன் தனது காதல் மனைவியான சூரிய பிரியாவிடம் கூறியதன் காரணமாக அதிர்ச்சி அடைந்த சூரிய பிரியா காதலன் வீட்டின் முன்பு காதல் கணவரை சேர்த்து வைக்க வேண்டும் என கூறி தர்ணாவில் ஈடுபட்டார்.
இதனை அறிந்த காளியப்பனின் தந்தை பெண் வீட்டாரை ஆபாச வார்த்தைகளால் அர்ச்சனை செய்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்த சம்பவம் அறிந்து வந்த நாட்றம்பள்ளி போலீசார் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இது குறித்து விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர். காதல் திருமணம் செய்து கொண்டு பத்து மாதத்தில் குழந்தையை விட்டு சென்ற காதலன் வீட்டு முன்பு காதலி தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது