ஆண்டிபட்டி அருகே காய்ச்சல் காரணமாக 13 வயது சிறுமி உயிரிழப்பு உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா கடமலைக்குண்டு அருகே உள்ள மேலப்பட்டி கிராமத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவரது மகள் மோகனப்பிரியா (13) காய்ச்சலால் பாதிக்கப்பட்டு நேற்று (அக்.18) தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் மோகனப்பிரியா இன்று (அக்.19) சிகிச்சை பலனின்றி மருத்துவமனையிலேயே உயிரிழந்தார்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள சங்கரமூர்த்திபட்டியை சேர்ந்த 10 வயதான மோகித் என்ற சிறுவன் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு நேற்று (அக்.18) உயிரிழந்த நிலையில் இன்று (அக்.19) ஆண்டிப்பட்டி அருகே உள்ள மேலப்பட்டி கிராமத்தை சேர்ந்த 13 வயது சிறுமி காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டபோது சிறுமிக்கு ஆறு நாட்களாக காய்ச்சல் இருந்ததோடு, மஞ்சள் காமாலையும் இருந்ததால் சிகிச்சை பலனளிக்காமல் உடல் உறுப்புகள் செயலிழந்து உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர்.