வாணியம்பாடி நேதாஜி நகர் பகுதியில் சாலை நடுவில் விழுந்துள்ள ராட்சத பாறையை வருவாய் துறையினர் மற்றும் நகராட்சி நிர்வாகத்தினர் ஜேசிபி எந்திரம் கொண்டு அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நேதாஜி நகர் தெற்கு மில்லத் நகர் பகுதியில் சாலை ஓரம் முனியப்பன் என்பவர் வீட்டின் அருகில் மலைக்குன்றின் மீது ராட்சத பாறை இருந்துள்ளது.கடந்த இரண்டு நாட்களாக பெய்த மழையின் காரணமாக ராட்சத பாறை நேற்று இரவு மன் சரிந்து சாலை நடுவில் விழுந்துள்ளது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகனங்கள் செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வாணியம்பாடி வட்டாட்சியர் சுதாகர் தலைமையில் வருவாய்த் துறையினர், நகராட்சி ஆணையாளர் ரகுராமன் தலைமையில் நகராட்சி பணியாளர்கள் மற்றும் நகர திமுக செயலாளர் சாரதி குமார் ஆகியோர் பாறையை ஊளி கொண்டு உடைத்து ஜேசிபி இயந்திரம் மூலமாக
அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.