திருப்பத்தூர் தென்மாபட்டில் மாபெரும் இரட்டை மாட்டு வண்டி பந்தயம்…!!

திருப்பத்தூர் தென்மாபட்டில் மாபெரும் இரட்டை மாட்டு வண்டி பந்தயம் சாலையின் இரு புறங்களிலும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள்’ ரசிகர்கள் கண்டுகளிப்பு*

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தென்மாபட்டு பகுதியில் 5ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு 2ஆம் ஆண்டு மாபெரும் இரட்டை மாட்டு வண்டி எல்கை பந்தயம் வெகு விமர்சையாக நடைபெற்றது. தஞ்சாவூர்-சிவகங்கை தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்ற பந்தயத்தில் சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பெரிய மாடு பிரிவில் 9 ஜோடிகளும், சிறிய மாடு பிரிவில் 13 ஜோடிகளும் என மொத்தம் 22 ஜோடி மாட்டு வண்டிகள் பங்கேற்றன. பந்தய எல்லைகளாக பெரிய மாட்டிற்க்கு ஏழு மைல் தூரமும், சிறிய மாட்டிற்க்கு ஐந்து மைல் தூரமும் பந்தைய குழுவினரால் நிர்ணயிக்கப்பட்டன. போட்டியில் வெற்றி பெற்ற காளைகளுக்கும், உரிமையாளர்களுக்கும் விழா குழு சார்பில் தொகையும், பரிசு கோப்பைகளும் வழங்கப்பட்டன.இப்போட்டியை காண சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் திரளாக வந்து ஆர்வமுடன் உற்சாகப்படுத்தி கண்டு களித்தனர்.

RELATED ARTICLES

Recent News