ரிஷெப் ஷெட்டி இயக்கத்திலும் , நடிப்பிலும் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் காந்தாரா. ஏறக்குறைய உலகளவில் ரூ. 400 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இந்நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகப்போவதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்ததையடுத்து, தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்தினை அறிவிப்பு டீசர் மற்றும் First லுக் உடன் வெளியிட்டுள்ளனா்.7 மொழிகளில் வெளிவரவுள்ள இப்படத்திற்கு காந்தாரா ஏ லிஜெண்ட் சாப்டர் 1 என தலைப்பு வைத்துள்ளனர்.
இதைவைத்து பாா்க்கும் பொழுது இந்த இரண்டாம் பாகத்திற்கும் மற்றொரு இரண்டாம் வெளியாகும் என்று தொிகிறது. ரத்தம் வழிய வழிய செம மாஸான கெட்டப்பில் வெளிவந்துள்ள இந்த டீசரை காந்தாராவின் ரசிகா்கள் ஷோ் செய்து கொண்டாடி வருகின்றனா்.