நேசமணி கதாபாத்திரத்தை உருவாக்கிய இயக்குனர் சித்திக் கவலைக்கிடம்..!

மலையாள திரையுலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் சித்திக். இவர், தமிழில் எங்கள் அண்ணா, ‘ப்ரண்ட்ஸ்’, சாது மிராண்டா, ‘காவலன்’ போன்ற பல படங்களை இயக்கியுள்ளார்.

நிமோனியா மற்றும் கல்லீரல் நோய்களுக்காக சிகிச்சை பெற்று வந்த இவருக்கு, நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டதை தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். எக்மோ உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த இவர், தற்போது ஆபத்தான நிலையில் உள்ளதாக சொல்லப்படுகிறது.

ப்ரண்ட்ஸ் திரைப்படத்தின் நேசமணி கதாபாத்திரத்தை உருவாக்கிய சித்திக், விரைவில் குணமடைய அவருடைய ரசிகர்கள் பிராத்தனை செய்து வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News