விடுதலை போராட்ட வீரர் தியாகி சங்கரய்யா காலமானார்!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், விடுதலைப் போராட்ட வீரருமான என்.சங்கரய்யா(102) சளி மற்றும் காய்ச்சலால் ஆக்சிஜன் குறைவு ஏற்பட்டதை அடுத்து திங்கள்கிழமை அன்று சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில், சங்கரய்யா சிகிச்சை பலனின்றி இன்று காலை 9.30 மணியளவில் மருத்துவமனையில் காலமானார். இவரது உடல் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று மதியம் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது.

3 முறை எம்.எல்.ஏ.வாக பணியாற்றியுள்ள தியாகி சங்கரய்யாவுக்கு தகைசால் தமிழர் விருது வழங்கி தமிழஅரசு கவுரவித்துள்ளது. அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்தருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News