பெண்களுக்கான இலவச பேருந்து பயண திட்டத்தை உடனடியாக அவர் அமல்படுத்த வேண்டும் என்று ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஒய்.எஸ். ஷர்மிளா வலியுறுத்தியுள்ளார்.
ஒய்.எஸ். ஷர்மிளாஅப்போது அவர் பேசியதாவது: ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான அரசு பதவியேற்று 5 மாதங்கள் ஆகின்றன. ஆனால், தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை இதுவரை அமல்படுத்தவில்லை. அவர் அளித்த சூப்பர் சிக்ஸ் தேர்தல் வாக்குறுதி என்னவானது? அவர் உடனடியாக அந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்.
இதிலும் ஆண்டுக்கு 3 காஸ் சிலிண்டர்கள் இலவச திட்டம், பெண்களுக்கான இலவச பேருந்து பயண திட்டத்தை உடனடியாக அவர் அமல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.