இலவச AI படிப்பு..!! சென்னை ஐஐடி அறிவிப்பு..!!

தற்கால நவீன தொழில்நுட்பத்தில் செயற்கை நுண்ணறிவு என்பதை தவிர்க்க முடியாது. கல்வி, மருத்துவம், தொழில் என பல துறைகளில் ஏஐ பயன்பாடு வந்துவிட்டது. எதிர்கால தேவைக்கு ஏற்ப, மாணவர்களுக்கான கற்பித்தல் முறையில் ஏஐ பயன்பாடு பயனுள்ளதாக இருக்கிறது. அந்த வகையில், கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு ஏஐ பயன்பாட்டு பயிற்சியை சென்னை ஐஐடி இலவசமாக வழங்குகிறது.

மத்திய கல்வித்துறையின் கீழ் ஸ்வயம் இணையதளம் மூலம் ஆன்லைன் வழியான கல்வி வழங்கப்படுகிறது. இதில் சென்னை ஐஐடி பல்வேறு விதமான படிப்புகள் வழங்கி வருகிறது. இதில் சென்னை ஐஐடி-யின் பிரவர்தக் டெக்னாலஜிஸ் அறக்கட்டளை மூலம் ஏற்கனவே 5 விதமான ஏஐ படிப்புகள் மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. இந்நிலையில், ஆசிரியர்களுக்கான புதிய “AI for Educators” என்ற படிப்பை சென்னை ஐஐடி அறிமுகம் செய்துள்ளது.

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) வளர்ச்சி என்பது வேகமெடுத்து வருகிறது. குறிப்பாக கல்வியில் இதன் பயன்பாடு முக்கியமானதாக உள்ளது. விரைவாக தேடுதல், பதில்களை முறையாக வகுத்தல், வீட்டு பாடம் செய்ய உதவுதல் உள்ளிட்ட சிறிய பணி முதல் பெரியளவிலான பணி வரை ஏஐ மூலம் செய்ய முடிகிறது.

இதனைக் கருத்தில் கொண்டு அனைவருக்கும் ஏஐ என்ற திட்டத்தை சென்னை ஐஐடி செயல்படுத்தி வருகிறது. கல்வித்துறையின் ஸ்வயம் 2.0 கீழ், பைத்தானில் ஏஐ, கிரிக்கெட் அனலிட்டிக்ஸ் ஏஐ, இயற்பியலில் ஏஐ, வேதியியலில் ஏஐ, கணக்கியலில் ஏஐ ஆகிய 5 ஏஐ படிப்புகளை சென்னை ஐஐடி இலவசமாக வழங்குகிறது. தற்போது இதற்கான இரண்டாம் சுற்று விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது.

பல்வேறு துறைகளில் இத்தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட தொடங்கிய நிலையில், கற்பிக்கும் முறையிலும் இதன் தேவை அவசியமாக உள்ளது. ஆனால், செயற்கை நுண்ணறிவை கற்பித்தலில் முறையாக எப்படி பயன்படுத்துவது என்பதை ஆசிரியர்கள் அறிந்துகொள்ள வேண்டும். இதனைக் கருத்தில் கொண்டு சென்னை ஐஐடி ”AI for Educators” என புதிய படிப்பை அறிமுகம் செய்துள்ளது. இவை அனைத்தும் குறுகியக் கால படிப்புகள் ஆகும். ஆன்லைன் வழியாக இலவசமாக படிக்கலாம்.

ஆசிரியர் பணியை செய்பவர்கள், ஆசிரியராக விரும்புகிறவர்கள் இந்த படிப்பின் மூலம் பயன்பெறலாம். செயற்கை நுண்ணறிவு பற்றிய புரிதல், கருவிகள் மற்றும் செயல்முறை திறன் ஆகியவற்றை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு கற்பித்தல், மதிப்பீடு செய்தல் உள்ளிட்டவற்றுக்கு ஏஐ பயன்பாடு குறித்து கற்பிக்கப்படும். மாணவர்கள் சார்ந்த கற்கும் முறையின் அடிப்படையில் ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தல் குறித்த தெளிவை இந்த படிப்பு ஏற்படுத்தி தரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நர்சரி வகுப்பு ஆசிரியர்கள் முதல் 12-ம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்கள் வரை இதில் கலந்துகொள்ளலாம்.

ஆங்கில மொழியில் அதிகபடியாக 40 மணி நேரத்திற்கு வழங்கப்படுகிறது. இதற்கான பாடத்திட்டம் சென்னை ஐஐடி நிபுணர்கள் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு கிரெட்டி வழங்கப்படும். முழுமையாக முடித்து தேர்வை எழுதி தேர்ச்சி பெறும் நபர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.

நன்மைகள் என்னென்ன?

விரும்பிய நேரத்தில் வீட்டில் இருந்தப்படியே ஆன்லைன் வழியாக படிக்கலாம். நடைமுறை பயன்பாடுகள் குறித்து பயிற்சி அளிக்கப்படும். வார மதிப்பீடு தேர்வுகள், நோட்ஸ் வழங்கப்படும். வீடியோ வடிவில் வகுப்புகளை பார்க்கலாம். குறைந்த கட்டணத்தில் தேர்வு நடத்தப்படும். தேர்வை நேரடியாக ஒதுக்கப்பட்ட மையத்தில் சென்று எழுத வேண்டும். தேர்ச்சி பெறுபவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.

விண்ணப்பிப்பது எப்படி?

ஆசிரியர்களுக்கான ஏஐ மட்டுமின்றி, சென்னை ஐஐடி மூலம் வழங்கப்படும் இதர ஏஐ படிப்புகளுக்கும் விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://swayam-plus.swayam2.ac.in/ai-for-all-courses என்ற இணையதளத்தில் அக்டோபர் 10-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பப் பதிவு, வகுப்பு ஆகியவை இலவசமாகும். சான்றிதழ் பெற தேர்விற்கான கட்டணத்தை செலுத்த வேண்டும். ஆசிரியர்கள் மட்டுமின்றி, மாணவர்கள் இந்த படிப்பு மூலம் பயன்பெறலாம்.

RELATED ARTICLES

Recent News