பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வரும் அகாலி தளம் கட்சியின் மூத்த தலைவருமான பிரகாஷ் சிங் பாதல் (95) இன்று காலமானார்.
பிரகாஷ் சிங் பாதலுக்கு, கடந்த வாரம் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து மொகாலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இரைப்பை அழற்சி மற்றும் ஆஸ்துமா காரணமாக மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

‘இந்நிலையில், சிகிச்சை பலனின்றி பிரகாஷ் சிங் பாதல் நேற்று உயிரிழந்தார். இதனை அவரது மகனும், அகாலி தளம் கட்சியின் தலைவருமான சுக்பிர் சிங் பாதல் உறுதி செய்தார்.
பிரகாஷ் சிங் பாதல் பஞ்சாப் மாநிலத்தில் 5 முறை முதல்வராக இருந்துள்ளார். அவரது மறைவுக்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பிரகாஷ் சிங் பாதலின் மறைவுக்கு நாடு முழுவதும் 2 நாட்கள் தேசிய துக்க தினம் அனுசரிக்கபடும் என உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.