ரூ 8 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட கலையரங்கத்தை முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ திறந்து வைத்தார்…!!

கோவில்பட்டி அருகே சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ 8 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட கலையரங்கத்தை முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கரிசல்குளம் கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ 8 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட கலையரங்கம் திறப்பு விழா நடைபெற்றது. விழாவில் மத்திய பகுதி ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி தலைமையில் தூத்துக்குடி அதிமுக வடக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்து அப்பகுதி மக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். நிகழ்ச்சியில் மேற்கு ஒன்றிய செயலாளர் அழகர்சாமி, ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் போடுசாமி, முன்னாள் இளைஞர் இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் கணேசன்,
மாவட்ட மருத்துவ அணி செயலாளர் கோசலைராமன்,கரிசல் குளம் கிராம மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

RELATED ARTICLES

Recent News