வேலூர் மாவட்டம் குடியாத்தம் பாண்டியன் நகர் பகுதியைச் சேர்ந்த குடியாத்தம் குமரன் திமுகவில் கொள்கை பரப்பு துணைச் செயலாளராக இருந்து கட்சி கட்டுப்பாட்டை மீறியதாக அவரை கட்சியிலிருந்து கடந்த ஆண்டு நீக்கினர்
இந்த நிலையில் இவர் வாட்ஸ் ஆப் பேஸ்புக் சமூக வலைத்தளங்களில் எதிர்க்கட்சி தலைவர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் குறித்து அவதூறாகவும் ஆபாசமாகவும் பேசி வந்த நிலையில் இவர் மீது அதிமுக பாஜக உள்ளிட்ட நிர்வாகிகள் குடியாத்தம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள நிலையில்
தற்போது குடியாத்தம் குமரன் பாமக தலைவர் அன்புமணி குறித்து அவதூராகவும் ஆபாசமாகவும் பேசி சமூக வலைத்தளங்களில் வீடியோவை பதிவிட்டு வந்த நிலையில்,
குடியாத்தம் பகுதியை சேர்ந்த பாமக மகளிர் அணியினர் ஐந்துக்கும் மேற்பட்டோர் துடுப்போம், மொரம் உள்ளிட்ட பொருட்களுடன் குடியாத்தம் குமரன் வீட்டை முற்றுகையிட்டனர் தகவல் அறிந்து வந்த குடியாத்தம் காவல்துறையினர் பாமக மகளிர் அணி நிர்வாகிகளை காவல் நிலையம் அழைத்து சென்று புகார் பெற்றுக்கொண்டு குடத்தல் குமரன் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர் இதனால் அந்த பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது