அரபிக்கடல் மற்றும் தென் மேற்கு வங்ககடல் என அதைச்சுற்றி வழிமண்டல கீழடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளது. இதனால், வடதமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமான முதல் மிதமான மழை பெய்து வருகிறது.தொடர்ந்து மூன்று நாட்கள் பெய்து வரும் மழையால்,மயிலாடுதுறையில் மிகவும் பிரபலியமான கோயிலாக விளங்கும் வைத்தீஸ்வரன் கோயிலுக்குள் வெள்ளநீா் புகுந்தது.கும்பகோணம் மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளில் செவ்வாய்க்கு மிகவும் உரித்தான தலம் இது ஒன்றே ஆகும்.
இதனால், இங்கு வந்த பக்தா்கள் பலரும் கோயில் தரிசனம் செய்ய முடியாமல் அவதிக்குள்ளாகினா்.சிலா், இதில் நனைந்தபடி தண்ணீருக்குள் செல்பி எடுத்து மகிழ்ந்தனா்.வெள்ளத்தால் சூழ்ந்த நீரை கோயில் நிா்வாகத்தினா் வெளியேற்றி வருகின்றனா்.