பஹல்காம் தாக்குதல்.. இலங்கைக்கு தப்பிச் சென்ற தீவிரவாதிகள்..? விமான நிலையத்தில் பரபரப்பு..

காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், சுற்றுலா பயணிகள் 26 பேரை, தீவிரவாதிகள் சுட்டுக் கொலை செய்த சம்பவம், நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, தாக்குதல் சம்பவத்திற்கு காரணமான தீவிரவாதிகளை பிடிப்பதற்கு, தீவிர விசாரணை நடந்து வருகிறது.

இந்நிலையில், தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடையதாக கருதப்படும் 6 பேர், சென்னையில் இருந்து இலங்கைக்கு விமானத்தில் தப்பிச் சென்றதாக, தகவல் வெளியாகியுள்ளது.

இதனால், சென்னையில் இருந்து கொழும்பு விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில், அதிகாரிகள், தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News