மேலூர் அருகே, பாரம்பரிய முறைப்படி நடைபெற்ற மீன்பிடி திருவிழாவில், பொதுமக்கள் பலர் கலந்துக் கொண்டனர்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அரியூர் கிராமத்தில் மோகினிசாத்தன் என்ற கண்மாய் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தின்போது, இந்த கண்மாயில் சமத்துவ மீன்பிடித் திருவிழா நடத்தப்படுவது வழக்கம்.
அந்த வகையில், இந்த ஆண்டு நடைபெற்ற மீன்பிடித் திருவிழாவில், திண்டுக்கல், திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து, பொதுமக்கள் பலர் கலந்துக் கொண்டனர். மேலும், கட்லா, கெளுத்தி, ஜிலேபி, அயிரை ஆகிய நாட்டு வகை மீன்களை பிடித்து மகிழ்ந்தனர்.