சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் நள்ளிரவில் 2 மணி அளவில் ஏல முறை தொடங்கியது.
நள்ளிரவில் திடீரென மழை பெய்தது. புரட்டாசி முடிந்த முதல் வாரம் என்பதால் மழையையும் பொருட்படுத்தாமல் வியாபாரிகளும், ஏராளமான பொதுமக்களும் ஆர்வமுடன் மீன்களை வாங்கி சென்றனர்.
மேலும், விசைப்படைகளின் வரத்து அதிகரித்த போதிலும் மீன்களின் விலை உயர்ந்ததால் அதனையும் உட்படுத்தாமல் வாங்கி செல்லும் அசைவ பிரியர்கள் வாங்கி சென்றனர்.
மீன்களின் விலைப்பட்டியல்-
வஞ்சிரம் ரூ.1,100, வவ்வால் ரூ.1,000, கொடுவா ரூ.900, ஷீலா ரூ.500, பால் சுறா ரூ.500, சங்கரா ரூ.600, பாறை ரூ.600, இறால் ரூ.400, நண்டு ரூ.400, நவரை ரூ.300, பண்ணா ரூ.300, காணங்கத்தை ரூ.400, கடுமா ரூ.400, நெத்திலி ரூ.300 .