சாலையை காணவில்லை, கண்டு பிடிச்சு தாங்க…இளைஞர் அளித்த புகாரால் பரபரப்பு

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வட்டத்திற்கு உட்பட்ட கீரமங்கலம் பேரூராட்சி 9-வது வார்டு பகுதியில் கீரமங்கலம் பேரூராட்சி மற்றும் செரியலூர் ஊராட்சிகளை இணைக்கும் கிராம சாலை உள்ளது.

400 மீ நீளம், 8.5 மீ அகலம் இருக்க வேண்டிய இந்த சாலையை தனிநபர்கள் ஆக்கிரமித்தது போக 5 மீ அகலம் மட்டுமே இருப்பதாகவும், மீதமிருக்கும் 3.5 மீ சாலையை மீட்டுத்தரக் கோரி இளைஞர்கள் புகார் அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இது குறித்து பல நாட்களாக பொதுமக்கள் கோரிக்கை வைத்தும் அரசு நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.

வடிவேலுவின் கிணற்றைக் காணவில்லை என்ற நகைச்சுவை பாணியில் சாலையைக் காணவில்லை எனக் கூறி புகாரளித்துள்ள சம்பவம் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

RELATED ARTICLES

Recent News