நடிகரும் இயக்குனருமான டி.பி.கஜேந்திரன் காலமானார்..!

பிரபல திரைப்பட நடிகரும் இயக்குனருமான டி.பி.கஜேந்திரன் (68) இன்று காலமானார்.

வீடு மனைவி மக்கள், எங்க ஊரு காவல்காரன், பட்ஜெட் பத்மநாபன் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார்.

இவர் கே. பாலசந்தர், விசு, ராம நாராயணன் போன்றோரிடம் 60 படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார்.

இந்நிலையில் டி.பி.கஜேந்திரன் வயது மூப்பு காரணமாக உடல் நலக்குறைவால் இன்று காலமானார்.

RELATED ARTICLES

Recent News