கொடைக்கானல் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு கட்டணம் நிர்ணயம்..!!

கொடைக்கானல் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா தலங்களுக்குள் செல்லும் சுற்றுலாப்பயணிகளின் நுழைவு கட்டணம் இன்று முதல் ஒரே முறையாக வசூல்,பெரியவர்களுக்கு 30 ரூபாய் எனவும் , சிறுவர்களுக்கு 20 ரூபாய் எனவும் கட்டணம் நிர்ணயம்…

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் முக்கிய சுற்றுலா தலங்களாக உள்ள (12 மைல் சுற்றுலா தலங்கள்) தூண் பாறை,குணா குகை, பைன் மரக்காடுகள் ,மோயர் சதுக்கம் உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் உள்ளன, இந்த சுற்றுலா தலங்கள் அனைத்தும் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது,

இந்நிலையில் இந்த சுற்றுலா தலங்களுக்குள் செல்லும் சுற்றுலாப்பயணிகளின் நுழைவு கட்டணம் அந்த அந்த சுற்றுலா தலங்களில் நபர் ஒருவருக்கு 10 ரூபாய் வீதம் வசூல் செய்யப்பட்டு வந்தது, இந்நிலையில் இன்று முதல் ஒரே முறை நுழைவு கட்டணமாக பெரியவர்களுக்கு நபர் ஒருவருக்கு 30 ரூபாய் விதமாகவும், 5 வயது முதல் 12 வயது வரை உள்ள சிறுவர்களுக்கு 20 ரூபாய் என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு சுற்றுலா தலங்களுக்குள் செல்லும் நுழைவுவாயில் பகுதியிலேயே வனத்துறை சார்பில் வசூல் செய்யப்பட்டு வருகிறது, மேலும் வாகனம் ஒன்றிற்கு 50 ரூபாய் வீதம் வனத்துறையினர் வசூல் செய்து வருகின்றனர், இதனை தொடர்ந்து இந்த நுழைவு பகுதியில் 7 வனத்துறை பணியாளர்கள் நுழைவு சீட்டினை மிஷன் மூலம் பிரிண்ட் செய்யப்பட்டு வழங்கி வருகின்றனர், தொடர் விடுமுறையில் இந்த ஒரே முறை கட்டணம் வசூல் செய்யப்படும் போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளது, இதனை வனத்துறையினர் கவனம் செலுத்தி நுழைவுக்கட்டணம் வசூல் செய்யும் பணியாளர்களை கூடுதலாக பணியில் அமர்த்தவும் வயது முதியவர்களுக்கு கட்டணம் வசூலிக்காமல் இருக்கவும் வாடகை ஓட்டுனர்கள் சார்பில் கோரிக்கை எழுந்துள்ளதும் குறிப்படத்தக்கது…


மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரே முறை நுழைவு கட்டணம் வசூல் செய்த நிலையில் எதிர்ப்புகள் ஏற்பட்ட நிலையில், மீண்டும் அந்த பகுதியில் நுழைவு கட்டணம் வசூல் செய்து வந்ததும் குறிப்பிடத்தக்கது…

RELATED ARTICLES

Recent News