தனுஷ் நடிப்பில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெளியான திரைப்படம் வாத்தி.கலவையான விமர்சனத்தை பெற்று வரும் இப்படத்தில் சமியுக்தா ஜோடியாக நடித்தார்.
இதனிடையே அருண் மாதேஷ் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் தனுஷ் நடித்து வருகிறார். பிரியங்கா மோகன் நாயகியாகவும், சந்தீப் கிஷான், சிவாரஜ் குமார் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துவரும் இப்படத்தில், ஜிவி.பிரகாஷ் இசை அமைக்கிறார்.

தற்போது கேப்டன் மில்லர் படத்தில் உரியடி இயக்குனர் விஜய்குமார் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இவர், முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.