தெலுங்கு திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் ராஜமவுலி. இவர் மாவீரா, நான் ஈ, பாகுபலி, RRR போன்ற படங்களை இயக்கியுள்ளார்.

கடந்த ஆண்டு வெளியான ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் ரூ.1100 கோடிக்கு மேல் வசூல் செய்து தற்போது விருதுகளை வென்று குவித்து வருகிறது. மேலும் சினிமா உலகின் உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருதுக்கான இறுதி நாமினேஷன் பட்டியலிலும் நாட்டு நாட்டு பாடல் இடம்பெற்று உள்ளது.

இந்நிலையில் பிரபல தெலுங்கு பட இயக்குனரான ராம்கோபால் வர்மா பதிவிட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது. அதில், “ராஜமவுலி சார் உங்களுக்கான பாதுகாப்பை அதிகரித்துக் கொள்ளுங்கள். உங்கள் மீதுள்ள பொறாமையால் சில இயக்குனர்கள் உங்களைக் கொல்ல குழு ஒன்றை அமைத்துள்ளனர். அந்த குழுவில் நானும் இருக்கிறேன். தற்போது குடிபோதையில் இருப்பதால் நான் உண்மையை கூறிவிட்டேன்” என பதிவிட்டுள்ளார்.

ராம்கோபால் வர்மா குடி போதையில் இப்படி உளறி இருப்பதை அறிந்த நெட்டிசன்கள் அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.