பசியில்லா புதுச்சேரியை உருவாக்கும் திட்டத்தின் கீழ் 30 தொகுதிகளிலும் இலவச உணவு வழங்கும் திட்டம் விரிவுபடுத்தப்படும் என்று பிரபல தொழிலதிபர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் தெரிவித்தார்
பிரபல தொழிலதிபரான ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் புதுச்சேரி அரசியலில் கவனம் செலுத்தி புதுச்சேரி மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார்.
அந்த வகையில் பசி இல்லா புதுச்சேரியை உருவாக்க வேண்டும் என்ற திட்டத்தை உருவாக்கி முதன் முறையாக காமராஜர் நகர் தொகுதியில் தொடங்கப்பட்டு தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் மதிய உணவு சாப்பிட்டு பயனடைந்து வருகின்றனர்.
இந்த திட்டத்தை விரிவுபடுத்தும் வகையில் இரண்டாவது தொகுதியாக முதலியார் பேட்டை தொகுதியில் இலவச உணவு வழங்கும் திட்டம் இன்று தொடங்கப்பட்டது. இதில் கலந்துகொண்ட பிரபல தொழிலதிபர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் பொதுமக்களுக்கு உணவு பரிமாறி திட்டத்தை தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்…
யாரும் பசியோடு இருக்கக் கூடாது என்ற நோக்கத்தில் இந்த திட்டம் தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு இருக்கிறது 30 தொகுதிக்கும் இந்த திட்ட விரிவுபடுத்தப்படும் என்று குறிப்பிட்ட அவர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மற்றும் காற்றின் மூலம் குடிநீர் உற்பத்தி செய்யும் திட்டத்தையும் புதுச்சேரியில் செயல்படுத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.