பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவான அட்டகத்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஹரி கிருஷ்ணன். இவர், மெட்ராஸ் படத்தில் ஜானி என்ற கதாபாத்திரத்தில் நடித்து, ரசிகர்களிடையே பெரும் பிரபலம் அடைந்தார்.
இதையடுத்து, கபாலி, சண்டக்கோழி 2, விக்டிம் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து வந்தார். இந்நிலையில், இவரது பிறந்த நாளையொட்டி, பிரபல நடிகை துஷாரா விஜயன், பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்து, என்னுடைய ஹரி-க்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் என்று கூறியிருந்தார்.

இதனை பார்த்த நெட்டிசன்கள், என்னுடைய ஹரி என்று அவர் குறிப்பிட்டிருப்பதால், இருவரும் காதலிக்கிறார்களா? என்று கேள்வியை எழுப்பியுள்ளனர். இந்த யூகம் உண்மையா? அல்லது வெறும் வதந்தி மட்டுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்..