மிச்சாங் புயலின் எதிரொலியால் , சென்னை அதை சுற்றியுள்ள மாவட்டங்களில் இரண்டு நாட்களாக கனமழை கொட்டிதீா்க்கிறது. இதனால் பொதுமக்கள் பலரும் பலவித இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனா்.
இதில் தற்போது நடிகா் ரோபோ ஷங்கா் வெள்ளத்தில் சிக்கி ,காயமடைந்ததாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா்.அதில் அவா் கூறியுள்ளதாவது, தனது வீட்டிற்கு தேவையான பொருடகள் வாங்க கடைக்கு சென்றபோது வெள்ளத்தில் சிக்கியதாகவும் ,மளிகை சாமான் ,பால் போன்ற பொருட்களை வாங்கி வைத்துக்கொண்டு பத்திரமாக இருங்கள் எனஅவ்வீடியோவில் தொிவித்துள்ளாா்.