தாம்பரம் அருகே குடும்ப சண்டை உறவினர் சண்டையாக மாறிய விவகாரம்

தாம்பரம் அருகே, இளம்பெண்ணையும் அவரது குடும்ப உறுப்பினர்களையும், முன்னாள் கணவர் தாக்கும் பரபரப்பு சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

சென்னை தாம்பரம் அருகே உள்ள சோலையூர் பகுதியை சேர்ந்தவர் தினேஷ். இவருக்கும், கோட்டீஸ்வரி என்ற பெண்ணுக்கும், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

திருமணத்திற்கு பிறகு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். இதையடுத்து, இருவரும் அவரவர் வீடுகளில், வசித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம், கோட்டீஸ்வரியின் சகோதரர், தனது வீட்டிற்கு சென்றுக் கொண்டிருந்தார்.

அப்போது, மது போதையில் அங்கு வந்த தினேஷ், தனது நண்பர்களுடன் சேர்ந்து, அவரை தாக்கினார். இதுமட்டுமின்றி, கோட்டீஸ்வரியின் வீட்டிற்கும் சென்ற தினேஷ், அங்கிருந்த குடும்ப உறுப்பினர்களையும் கடுமையாக தாக்கி, ரகளையில் ஈடுபட்டார்.

இந்த கொடூர தாக்குதலில் பாதிக்கப்பட்ட அனைவரும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையே, தினேஷ் தனது நணபர்களுடன் சேர்ந்து, பெண் வீட்டாரை தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக காவல்துறையினரும், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News